/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை
திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை
திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை
திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை
ADDED : ஜூன் 10, 2025 10:12 PM

செஞ்சி; நல்லாண் பிள்ளை பெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது.
செஞ்சி ஒன்றியம் நல்லாண்பிள்ளைபெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 19ம் ஆண்டு கருட சேவை நேற்று முன்தினம் நடந்ததது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடமுடையானுக்கு சிறப்பு திருமஞ்சனமும் அதைத் தொடர்ந்து, கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழாவின்போது, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை வைணவ மகா சபை நிர்வாகிகள் சேகர், அறிவழகன், கதிரவன், பச்சையப்பன், பாண்டியன், அண்ணாதுரை, அனந்தாழ்வார் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.