/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு பள்ளி பின்புறம் குவிந்துள்ள குப்பைகள் அரசு பள்ளி பின்புறம் குவிந்துள்ள குப்பைகள்
அரசு பள்ளி பின்புறம் குவிந்துள்ள குப்பைகள்
அரசு பள்ளி பின்புறம் குவிந்துள்ள குப்பைகள்
அரசு பள்ளி பின்புறம் குவிந்துள்ள குப்பைகள்
ADDED : ஜூன் 08, 2025 10:35 PM

திண்டிவனம்: திண்டிவனம் முஸ்லீம் பள்ளி பின்புறம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் நேரு வீதியிலுள்ள முஸ்லீம் நடுநிலைப்பள்ளி பின்புறம் உள்ள காலி இடத்தில், அப்பகுதி மக்கள் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் இயங்கும் இறைச்சி கடைகளின் கழிவுகளும் குப்பையுடன் கொட்டி வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
குப்பையில் உள்ள கழிவுகளை சாப்பிட பன்றிகள் கூட்டம் கூட்டமாக திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் அப்பகுதி குப்பைகளை அகற்றுவதில்லை. இதனால் குப்பை குவிந்து கிடக்கிறது. பொது மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நலன் கருதி குப்பைகளை அகற்ற வேண்டும்.