/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : செப் 13, 2025 07:28 AM
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் கங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழா, கடந்த 10ம் தேதி காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமங்கள், கோ பூஜை நடந்தது. 11ம் தேதி ரக் ஷா பந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசமும், முதல் கால யாக சாலை பூஜையும் நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், விசேஷ திரவிய ஹோமங்களும் நடந்தன.
பிறகு கடம் புறப்பாடாகி 10:30 மணிக்கு கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, மூலவர் கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு உற்சவர் அம்மன் வீதியுலா நடந்தது.