/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் வழங்கல் முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் வழங்கல்
முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் வழங்கல்
முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் வழங்கல்
முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் வழங்கல்
ADDED : ஜூலை 02, 2025 11:52 PM

விழுப்புரம் : விழுப்புரம், காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 50 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1975ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், நாட்டு நலப்பணி அலுவலர் ரத்தினமணி, ராஜசேகர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
உடற்கல்வி இயக்குநர் மணிவண்ணன் வரவேற்றார். முன்னாள் மாணவர்களான, பன்னாட்டு நிறுவன தலைவர்களாக உள்ள சையதுசஜாத்அலி, ஜோதிசெல்வம், ஐகோர்ட் வழக்கறிஞர் சந்திரமவுலி, ஓய்வு பெற்ற கேந்திரா வித்யாலயா பள்ளி முதல்வர் சுரேஷ், ஹரிகரன், ராஜேந்திரன், நாராயணன், சையத் இஸ்மாயில், ஆராமுதன், பிரபாகரன், மோகன், லட்சுமிகாந்தன், முருகன், பாலு, நாகராஜ், ஜெயந்தி நடராஜன், சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவர்கள், பள்ளிக்கு சமூக பங்களிப்பாக ரூ.2 லட்சம் மதிப்பில், வகுப்பறைகளுக்கு பெயிண்ட் அடித்தல், மின் உபகரணங்களை பழுது நீக்கம் செய்தும் உதவி உபகரணங்களை வழங்கினர்.
மேலும், கடந்தாண்டு நடந்த பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருதும், பரிசும் வழங்கினர்.
முன்னாள் தலைமை ஆசிரியர்களான ஆரோக்கியதாஸ், ராமமூர்த்தி, ரகுபதி, ஆசிரியர்கள் நாராயணன், பாலு, ஓவியா, மார்கபந்து ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்களை, பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர். ஒருங்கிணைப்பாளர் பசுபதி நன்றி கூறினார்.