/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாஜி அமைச்சர் சண்முகம் வழக்கு; ஆக., 1க்கு ஒத்திவைப்பு மாஜி அமைச்சர் சண்முகம் வழக்கு; ஆக., 1க்கு ஒத்திவைப்பு
மாஜி அமைச்சர் சண்முகம் வழக்கு; ஆக., 1க்கு ஒத்திவைப்பு
மாஜி அமைச்சர் சண்முகம் வழக்கு; ஆக., 1க்கு ஒத்திவைப்பு
மாஜி அமைச்சர் சண்முகம் வழக்கு; ஆக., 1க்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 02, 2025 08:19 AM
விழுப்புரம்; விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் முன்னாள் அமைச்சர் சண்முகம் மீதான அவதுாறு வழக்கு விசாரணை வரும், ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஆரோவில் பஸ் நிலையம் அருகே கடந்த, 2023ம் ஆண்டு, மார்ச் மாதம் மற்றும் கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் அதே ஆண்டு மே மாதம் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டங்களில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சண்முகம், தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் தரக்குறைவாகவும், அவதுாறாகவும் பேசியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சண்முகம் மீது, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம், வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகள், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சண்முகம் ஆஜராகவில்லை. அவர் தரப்பில், அ.தி.மு.க., வக்கீல்கள் ராதிகா, தமிழரசன் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.
விசாரித்த மாவட்ட நீதிபதி மணிமொழி, விசாரணையை ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.