/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு புறப்பட்ட மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு புறப்பட்ட மீனவர்கள்
மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு புறப்பட்ட மீனவர்கள்
மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு புறப்பட்ட மீனவர்கள்
மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு புறப்பட்ட மீனவர்கள்
ADDED : ஜூன் 16, 2025 12:46 AM
மரக்காணம் : மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் மரக்காணம், கோட்டக்குப்பம் மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு சென்று மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
விழுப்புரம் மாவட்ட கடலோரத்தில் மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில் அனுமந்தை, எக்கியர்குப்பம், கூனிமேடுகுப்பம், நடுக்குப்பம், தந்திராயன்குப்பம் உள்பட 19 மீனவ கிராமங்கள் உள்ளது. மீனவர்களின் நலன் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுகிறது.
இந்த காலகட்டத்தில், விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவு முடிந்ததை யொட்டி மரக்காணம், கோட்டக்குப்பம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை கடல் அலையின் சீற்றம் அதிகமானதால் சில மீனவர்கள் மட்டும் மீன் பிடிக்க படகில் சென்றுள்ளனர்.