அரசு பள்ளி சமையலறையில் தீ விபத்து
அரசு பள்ளி சமையலறையில் தீ விபத்து
அரசு பள்ளி சமையலறையில் தீ விபத்து
ADDED : ஜூன் 03, 2025 07:17 AM
செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வடங்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சமையலர் தங்கம், நேற்று காலை, பள்ளி சமையலறையில் சமைக்க தொடங்கியபோது, காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தங்கம் உடனடியாக, அங்கிருந்த கோணிப்பைகளை கொண்டு, தீயை அணைத்தார். இருப்பினும், அங்கிருந்த அரிசி, பருப்பு நாசமானது.
சமையல் காஸ் ஏஜன்சியை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்ததில், காஸ் சிலிண்டரிலிருந்து அடுப்பிற்கு செல்லும் குழாய் சேதமடைந்ததால், கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. பின், சரி செய்யப்பட்டது.