/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஓராண்டில் ரூ.5.90 கோடி நிதியுதவி தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஓராண்டில் ரூ.5.90 கோடி நிதியுதவி
தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஓராண்டில் ரூ.5.90 கோடி நிதியுதவி
தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஓராண்டில் ரூ.5.90 கோடி நிதியுதவி
தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஓராண்டில் ரூ.5.90 கோடி நிதியுதவி
ADDED : ஜூன் 07, 2025 10:23 PM
விழுப்புரம்: விழுப்புரம் மண்டலத்தில், பணியின் போது இறந்த அரசு போக்குவரத்து தொழிலாளர் குடும்பத்திற்கு, ரூ.5.90 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பணியின் போது இறந்த இரு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் காசோலையை மேலாண்மை இயங்குனர் குணசேகரன் வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களிடமிருந்து, குடும்ப நலனுக்காக தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து தொழிற் சங்கங்களின் ஒத்துழைப்புடன் சேகரிக்கப்பட்ட இந்த தொகையில் இருந்து, பணியின் போது இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மண்டலத்தில், கடந்த ஓராண்டில் பணியின்போது இறந்த 6 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், பணியில் அல்லாத போது இறந்த 106 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடியே 90 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பொது மேலாளர் (தொழில் நுட்பம்) ரவீந்திரன், பொதுமேலாளர் ஜெய்சங்கர், பி.ஆர்.ஓ., செந்தில் மற்றும் தொழிற் சங்க பிரதிநிதிகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.