/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நந்தன் கால்வாயை சீரமைக்க வேண்டும்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை நந்தன் கால்வாயை சீரமைக்க வேண்டும்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
நந்தன் கால்வாயை சீரமைக்க வேண்டும்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
நந்தன் கால்வாயை சீரமைக்க வேண்டும்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
நந்தன் கால்வாயை சீரமைக்க வேண்டும்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
ADDED : ஜூன் 25, 2025 02:31 AM
செஞ்சி :வடகிழக்கு பருவ மழைக்கு முன் நந்தன் கால்வாயை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் தமிழகத்தை தாக்கிய பெஞ்சல் புயலின் போது நந்தன் கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்புகள் வழியாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.
இதை சீரமைக்காவிட்டால் வடகிழக்கு பருவமழையின் போது ஏரிகளுக்கு தண்ணீர் வராது. இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் அறவாழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயபாலன் மற்றும் விவசாயிகள் விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் அளித்த மனு:
நந்தன் கால்வாய் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய ஏரியான பனமலை ஏரி உட்பட 40க்கும் மேற்பட்ட ஏரிகள் பயனடைந்து வருகின்றன.
பெஞ்சல் புயலின்போது ஏற்பட்ட அதிகப்படியான வெள்ளத்தினால் கால்வாயில் சேதம் ஏற்பட்டுள்ளது.
சேதம் ஏற்பட்ட இடங்களை நீர்வளத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து 74 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகளை செய்ய அரசுக்கு முன்மொழிவு அனுப்பியுள்ளனர்.
எனவே வட கிழக்கு பருவ மழை துவங்கும் முன் நீர்வளத்துறை மூலமாகவோ அல்லது தன்னார்வலர் அமைப்புகள் மூலமாகவோ கால்வாயை சீரமைத்து ஏரிகளுக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.