ADDED : ஜூன் 12, 2025 10:37 PM

விழுப்புரம்; விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
அகர்வால் கண் மருத்துவமனை, ஆர்.கே.கண் மருத்துவமனை சார்பில் நடந்த முகாமிற்கு, ஒருங்கிணைப்பாளர் குருபாநிதி தலைமை தாங்கினார். கண் பரிசோதகர்கள் ரோஷன், திரிஷா, ஒளியியல் வல்லுநர் அப்துல்ரகுமான் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
முகாமில், கணினி முறையில் கண் பரிசோதனை செய்து, துார மற்றும் கிட்டப்பார்வை, கண் புரை போன்ற குறைபாடுகள் கண்டறிந்து ஆலோசனை வழங்கப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.