Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வீடூர் அணையில் உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்

வீடூர் அணையில் உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்

வீடூர் அணையில் உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்

வீடூர் அணையில் உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்

ADDED : அக் 24, 2025 03:27 AM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி: வீடூர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து வருவதால் இரண்டாவது நாளாக உபரி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையில் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து நேற்று முன்தினம் அணையின் முழு கொள்ளளவான 32 அடியில் ( 605 மில்லியன் கன அடி) 31.100 அடியை (534.528 மில்லியன் கன அடி) எட்டியது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.

நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3,196 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 4,410 கன அடி தண்ணீரைவெளியேற்றினர். காலை 8:00 மணிக்கு வினாடிக்கு, 5,647 கன அடி தண்ணீர் வந்தது. அதே அளவு 5,647 கன அடி தண்ணீரை அணையில் இருந்து வெளியேற்றினர்.

மதியம் 12:00 மணிக்கு வினாடிக்கு 4333 கன அடி தண்ணீர் வந்ததையடுத்து, அணையிலிருந்து 5581 கன அடி தண்ணீரை வெளியேற்றினர். மாலை 4:00 மணிக்கு வினாடிக்கு, 2166 கன அடி தண்ணீர் வந்தது. இதையடுத்து, 4248 கன அடி தண்ணீரை அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக வெளியேற்றினர்.

நேற்று முன்தினம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன் , கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் அணையை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

உதவி கலெக்டர் ( பயிற்சி) வெங்கடேஷ்வரன், பொதுப்பணித்து றை செயற்பொறியாளர் அருணகிரி உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், உதவி பொறியாளர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிலையில்,நீர்வளத்துறை அதிகாரிகள் அணையில் முகாமிட்டு நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணையில் தண்ணீர் வெளியேறுவதை சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அணையில் பொதுமக்கள் இறங்காதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us