/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விக்கிரவாண்டியில் நடை மேம்பாலம் நகாய் இன்ஜினியர் ஆய்வு விக்கிரவாண்டியில் நடை மேம்பாலம் நகாய் இன்ஜினியர் ஆய்வு
விக்கிரவாண்டியில் நடை மேம்பாலம் நகாய் இன்ஜினியர் ஆய்வு
விக்கிரவாண்டியில் நடை மேம்பாலம் நகாய் இன்ஜினியர் ஆய்வு
விக்கிரவாண்டியில் நடை மேம்பாலம் நகாய் இன்ஜினியர் ஆய்வு
ADDED : ஜூன் 07, 2025 10:11 PM
விக்கிரவாண்டி : க்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரில் நான்குவழிச்சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்க நகாய் ஆலோசகர் நேற்று ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனையில் நான்கு வழிச்சாலையில் விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் பணியை நகாய் துவக்கி உள்ளது. இந்நிலையில், விக்கிரவாண்டி பேரூராட்சி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியிலிருந்து எதிரிலுள்ள ரயில் நிலையம், தனலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலையை பாதுகாப்பாக கடக்க சப் வே (சுரங்கபாதை) அமைத்து தரவேண்டும் என 3வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் பொதுமக்கள் திரளாக சென்று நகாய் திட்ட இயக்குனர் வரதராஜிடம் கடந்த ஏப்ரல் மாதம் மனு அளித்தனர் .
மனுவை பரிசீலனை செய்த திட்ட இயக்குனர் வரதராஜ், அப்பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்நிலையில் வெங்கடேஸ்வரா பகுதியில் நடைமேம்பாலம் அமைப்பது தொடர்பாக, நகாய் ஆலோசகர் இன்ஜினியர் ரமேஷ் நேற்று ஆய்வு செய்தார். கவுன்சிலர் ரமேஷ் பொதுமக்களுடன் சென்று, மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தனர்.
ஆலோசகர் இன்ஜினியர் ரமேஷ் கூறியதாவது; பொதுமக்கள் நலன் கருதி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து சென்னை நகாய் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஒப்புதலுக்கு பிறகு அப்பகுதியில் நடை மேம்பால பணி துவங்கும் என கூறினார். ஆய்வின் போது விக்கிரவாண்டி டோல்பிளாசா கள இன்ஜினியர் செந்தில் உடனிருந்தார்.