/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின்னணு சந்தை தளம் விழிப்புணர்வு முகாம் மின்னணு சந்தை தளம் விழிப்புணர்வு முகாம்
மின்னணு சந்தை தளம் விழிப்புணர்வு முகாம்
மின்னணு சந்தை தளம் விழிப்புணர்வு முகாம்
மின்னணு சந்தை தளம் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூன் 25, 2025 01:15 AM

விழுப்புரம் :விழுப்புரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அரசு மின்னணு சந்தை தளம் குறித்த விழிப்புணர்வு மற்றும் சேவை வழங்குநர் பதிவு முகாம் நடந்தது.
மாவட்டத் தொழில் மையம் பொதுமேலாளர் அருள் மற்றும் உதவிப் பொறியாளர் அஜய் விக்னேஷ்வர் தலைமை தாங்கினர். தேசிய சிறு தொழில்கள் கழக புதுச்சேரி கிளை முதன்மை மேலாளர் நரேந்திரகுமார், என்.எஸ்.ஐ.சி.,யின் ஒருமுனைப் பதிவுத் திட்டத்தின் பயன்கள் மற்றும் மின்னணு சந்தை தளம் குறித்தும் விளக்கினார்.
அரசு மின்னணு சந்தை பயிற்றுநர் வெங்கடேஷ் பழனி, பதிவு செய்து கொள்வதற்கான வழிகாட்டுதல் குறித்து பேசினார். தேசிய சிறுதொழில்கள் கழக முன்னெடுப்புகள் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்க தலைவர் கருணாநிதி, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழிலதிபர்கள் சங்க தலைவர் சசிகுமார் உட்பட தொழில்முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.