செஞ்சி
மின் வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மின்வாரிய கோட்ட தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் கன்னியப்பன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் சிறப்பு திட்ட தலைவர் சிவசங்கர் மற்றும் ஓய்வு பெற்ற நல அமைப்பின் விழுப்புரம் திட்ட தலைவர் ஜெயராமன், ஓய்வு பெற்ற நல அமைப்பின் கோட்ட தலைவர் சக்திவேல், கோட்ட செயலர் ஏழுமலை ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட செயலாளர் ராஜாமணி தலைமை தாங்கினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். துணைதலைவர்கள் சலீம், ஏழுமலை, துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சுதர்சனன், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.