/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ போதை பொருள் விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்' போதை பொருள் விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்'
போதை பொருள் விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்'
போதை பொருள் விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்'
போதை பொருள் விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்'
ADDED : ஜூன் 01, 2025 11:14 PM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு செல்பி பாயிண்ட் துவக்கி வைக்கப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருட்கள் தடுப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் தகவல்கள் கொண்ட செல்பி பாயிண்ட் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த செல்பி பாயிண்டை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் துவக்கி வைத்து, புகைப்படம் எடுத்து கொண்டார்.
இதில், விழுப்புரம் மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருட்கள் தொடர்பான புகார் அளிப்பதற்காக 10581 என்ற எண், 9498110581 என்ற மொபைல் எண் மற்றும் கியூஆர் கோட் இடம் பெற்றுள்ளது.
இதன் மூலம் மக்கள் போதை பொருட்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். புகார் அளிப்போரின் விபரம் பாதுகாக்கப்படுவதோடு, புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மீண்டும் கியூஆர் கோட் ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம். மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், உதவி ஆணையர் (கலால்) ராஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.