ADDED : மார் 24, 2025 04:42 AM

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த வைரபுரத்தில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் அமராவதி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மஸ்தான், பேச்சாளர் ஆரணி மாலா சிறப்புரையாற்றினர்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட அவைத் தலைவர் சேகர், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர் ரமணன், வர்த்தகர் அணி துணைத் தலைவர் பிரகாஷ், கவுன்சிலர் ஊரல்அண்ணாதுரை, வழக்கறிஞர் அசோகன், நிர்வாகிகள் சுப்ரமணி, காளி, தாண்டவமூர்த்தி, இளைஞரணி ேஹமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விவசாய அணி பாண்டியன் நன்றி கூறினார்.