/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தி.மு.க., செயற்குழு ஆலோசனை கூட்டம் தி.மு.க., செயற்குழு ஆலோசனை கூட்டம்
தி.மு.க., செயற்குழு ஆலோசனை கூட்டம்
தி.மு.க., செயற்குழு ஆலோசனை கூட்டம்
தி.மு.க., செயற்குழு ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 26, 2025 11:36 PM

செஞ்சி:செஞ்சியில், கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய சேர்மன் விஜய குமார் கிளை நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார்.
கூட்டத்தில், தி.மு.க., அரசு சாதனைகளை வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் குமார், மதியழகன், அனுசுயா மணிபாலன், குணசேகரன், அய்யாதுரை, இக்பால், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரசன்னா, மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் தாஸ் மற்றும் கிளை செயலாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.