/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் இன்று தி.மு.க., மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் இன்று தி.மு.க., மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம்
விழுப்புரத்தில் இன்று தி.மு.க., மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம்
விழுப்புரத்தில் இன்று தி.மு.க., மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம்
விழுப்புரத்தில் இன்று தி.மு.க., மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம்
ADDED : செப் 13, 2025 07:26 AM

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் இன்று மாலை நடக்கிறது என, லட்சுமணன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் இன்று மாலை 3:00 மணிக்கு, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில், விழுப்புரம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் துரை சரவணன், வானுார் தொகுதி பொறுப்பாளர் மாநில பொறியாளர் அணி செயலர் கருணாநிதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில், வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று, விழுப்புரம் மத்திய மாவட்டத்தில், விழுப்புரம், வானுா் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 569 ஓட்டுச்சாவடிகளிலும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்த குடும்பங்கள் கூடி, மண், மொழி, மானம் காப்பதற்கான உறுதிமொழி எடுப்பது குறித்தும், வரும் 17ம் தேதி, கரூரில் கட்சி சார்பில் நடக்கும் முப்பெரும் விழாவில் திரளாக கலந்துகொள்வது குறித்தும், ஓட்டுச்சாவடி முகவரி சரிபார்த்தல், ஒன்றிய, நகர, பேரூர் வாரியாக தேர்தல் பணி குழு அமைத்தல், கட்சி ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய மற்றும் பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.