/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரூ.2.27 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்; பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் ரூ.2.27 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்; பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
ரூ.2.27 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்; பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
ரூ.2.27 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்; பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
ரூ.2.27 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்; பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
ADDED : மே 31, 2025 01:04 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் ரூ. 2.27 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற கூட்டத்திற்கு சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பாலாஜி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஷேக் லத்தீப் வரவேற்று தீர்மானங்களை நிறைவேற்றினார்.
கூட்டத்தில் விக்கிரவாண்டி கக்கன் நகரில் ரூ. 1.50 கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபம், ரூ. 77 லட்சம் மதிப்பில் வெங்கடேஸ்வரா நகரில் சாலை அமைத்தல், மெயின்ரோட்டில் புதுப்பிக்கப்பட்ட சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.