/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ராஜா தேசிங்கு சிலை வைக்க கோரி வம்சாவழியினர் உண்ணாவிரதம் ராஜா தேசிங்கு சிலை வைக்க கோரி வம்சாவழியினர் உண்ணாவிரதம்
ராஜா தேசிங்கு சிலை வைக்க கோரி வம்சாவழியினர் உண்ணாவிரதம்
ராஜா தேசிங்கு சிலை வைக்க கோரி வம்சாவழியினர் உண்ணாவிரதம்
ராஜா தேசிங்கு சிலை வைக்க கோரி வம்சாவழியினர் உண்ணாவிரதம்
ADDED : செப் 15, 2025 02:50 AM

செஞ்சி: செஞ்சியில் ராஜா தேசிங்கு வம்சா வழியினரான ராஜா தேசிங் ராஜ்புத் போந்தில் சேனா சமூகநல சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சங்க நிறுவனர் ஸ்ரீதர்சிங் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜெய்சிங், புதுச்சேரி வளர்ச்சி கட்சி தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் விளக்க உரை நிகழ்த்தினர். பல்வேறு பகுதியில் இருந்து போந்தில் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
இதில், ராஜா தேசிங்கு மரணம் அடைந்த கடலியில் நடுகல் மற்றும் போர் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.
ராஜா தேசிங்கின் தந்தை சொருப் சிங், ராஜா தேசிங் மற்றும் அவரது நண்பர் மகமத்கானுக்கு சிலை அமைக்க வேண்டும். போந்தில் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோராக அறிவிக்க வேண்டும்.
மேலச்சேரியில் உள்ள சொருப் சிங், ராணி ராம்பாய் நினைவு இடத்தை சீரமைத்து வழிபாடு செய்ய ஏற்பாடு செய்வதுடன், வரலாற்று சின்னமாக பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; ராஜா தேசிங்கு அவரது தந்தையின் வரலாற்றை தமிழக அரசின் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.