/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வாலிபரிடம் ரூ.8.5 லட்சம் மோசடி சைபர் கிரைம் ஆசாமிகள் அட்டூழியம் வாலிபரிடம் ரூ.8.5 லட்சம் மோசடி சைபர் கிரைம் ஆசாமிகள் அட்டூழியம்
வாலிபரிடம் ரூ.8.5 லட்சம் மோசடி சைபர் கிரைம் ஆசாமிகள் அட்டூழியம்
வாலிபரிடம் ரூ.8.5 லட்சம் மோசடி சைபர் கிரைம் ஆசாமிகள் அட்டூழியம்
வாலிபரிடம் ரூ.8.5 லட்சம் மோசடி சைபர் கிரைம் ஆசாமிகள் அட்டூழியம்
ADDED : செப் 24, 2025 06:32 AM
விழுப்புரம் : வாலிபரிடம், ரூ.8.5 லட்சம் மோசடி செய்த சைபர் கிரைம் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன், 28; இவரது மொபைல் போனிற்கு கடந்த ஆக., 16ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள், வாட்ஸ் ஆப் எண்களில் இருந்தும், டெலிகிராம் ஐ.டி.,யில் இருந்தும் பகுதிநேர வேலைக்கான லிங்க்கு களை அனுப்பினர்.
அந்த நபர்கள் அனுப்பும் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் 'டாஸ்க்' முடித்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என கூறினார்.
இதை நம்பிய தமிழரசன், 20,999 ரூபாய் செலுத்தி 40,493 ரூபாயும், 30,000 ரூபாய் செலுத்தி 41,494 ரூபாய் திரும்ப பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து கடந்த, ஆக., 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரத்து 56 ரூபாயை 3 தவணைகளில் மர்மநபர்களின் வங்கி கணக்கிற்கு தமிழரசன் அனுப்பினார். பின், டாஸ்க் முடித்த பிறகு பணத்தை திருப்பிக்கொடுக்காமல் மர்மநபர்கள் ஏமாற்றினர்.
இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.