ADDED : செப் 04, 2025 05:35 AM
வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பி.பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கிராம இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இந்தாண்டுக்கான கிரிக்கெட் போட்டி தற்போது துவங்கி நடந்து வருகிறது.
இந்த போட்டியில், இடையஞ்சாவடி ராகுல் பிரண்ட்ஸ், நியூ பிரண்ட்ஸ், ஆரோ புலவர், வெற்றி கிரிக்கெட் கிளப், டி.சி., வாரியர்ஸ், ஆலங்குப்பம் கிரிக்கெட் அணி, ராவுத்தன்குப்பம் அணி, தைலாபுரம் கிரிக்கெட் அணி, காட்ராம்பாக்கம் கிரிக்கெட் அணி உள்பட மொத்தம் 32 அணிகள் பங்கேற்றுள்ளன.
நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 20 ஆயிரம் மற்றும் சுழற்கேடயமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது.
இதேபோன்று மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்படுகிறது. மேலும், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.