ADDED : செப் 20, 2025 07:15 AM

வானுார் : வானுார் அருகே 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்கப்பட்டது.
வானுார் அருகே, ஆப்பிரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணப்பன். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய கிணறு உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது மாடுகள் வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது பசுமாடு ஒன்று, 30 ஆழமுள்ள அந்த கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது.
தகவலறிந்த வானுார் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகையன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும், பசுமாட்டை போராடி மீட்டு பாதுகாப்பாக வெளியில் கொண்டு வந்தனர்.