/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் கலந்தாய்வு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் கலந்தாய்வு
அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் கலந்தாய்வு
அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் கலந்தாய்வு
அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் கலந்தாய்வு
UPDATED : ஜூலை 03, 2025 04:36 AM
ADDED : ஜூலை 03, 2025 01:24 AM
விழுப்புரம், : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் நாளை கணிதவியல், புள்ளியியல், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வு நடக்க உள்ளதாக முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு :
கல்லுாரியில் இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு தொடர்ச்சியாக, கணிதவியல், புள்ளியியல், ஆங்கிலம் பாடப்பிரிவுகள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவில் விண்ணப்பித்தோருக்கு நாளை கலந்தாய்வு நடக்கிறது.
இது பற்றி கல்லுாரி இணையதளம் http://www.aagacvpm.edu.in/ எனும் முகவரியில் காணலாம்.
மாணவர்கள் கலந்தாய்வு தினத்தில் காலை 9:00 மணிக்கு சேர்க்கை அரங்கில் இருக்க வேண்டும். தாமதமாக வருவோர், அதே நேரத்தில் சென்று கொண்டிருக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கைக்காக அனுமதிக்கப்படுவர். தேவையான ஆவணங்களுடன், சேர்க்கை கட்டணத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.