/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ லோக்சபா கூட்டத் தொடர் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் லோக்சபா கூட்டத் தொடர் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்
லோக்சபா கூட்டத் தொடர் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்
லோக்சபா கூட்டத் தொடர் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்
லோக்சபா கூட்டத் தொடர் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்
ADDED : ஜூன் 24, 2025 06:48 AM

விழுப்புரம் : லோக்சபா கூட்டத்தொடர் கோரிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு ரவிக்குமார் எம்.பி., தலைமை தாங்கி பேசினார். லாரன்ஸ் வரவேற்றார். வி.சி., மாவட்ட செயலாளர்கள் பெரியார், விடுதலைச்செல்வன், மலைச்சாமி, அறிவுக்கரசு, தனஞ்செழியன் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், பேராசிரியர் பிரபா கல்விமணி, வணிகர் சங்கம் முபாரக்அலி, ராஜேஷ், ரயில்வே யூனியன் பிரசன்னா, விஸ்வகர்மா சங்கம் ரமேஷ், வழக்கறிஞர் சங்கம் ராஜகுரு, போக்குவரத்து தொழிற்சங்கம் செல்வகுமார், ஓய்வூதியர் சங்கம் குணசேகரன் உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விழுப்புரம் ரயில்வே பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும். ரயில்வே மருத்துவமனையை புதுப்பிக்க வேண்டும். விழுப்புரம் நகை தொழிலாளர்களுக்கான ஒரு தொழிற் சந்தையை ஏற்படுத்த வேண்டும்.
நீதிமன்றத்தில் பொது நுாலகம் அமைக்க வேண்டும். ஆன் லைன் வர்த்தகத்தை தடுக்க வேண்டும், உயிர்காக்கும் மருந்துகளை ஆன்லைனில் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர்.
தொடர்ந்து பேசிய ரவிக்குமார் எம்.பி., 'விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கை மட்டுமின்றி, தமிழக மக்களுக்காகவும் லோக்சபாவில் பேசி, திட்டங்களை பெற்று நிறைவேற்றி வருகிறேன். தொடர்ந்து, வரும் கூட்டத்தொடரிலும், இந்த கோரிக்கைகள் நிறைவேறவும், புதிய சட்டங்கள் இயற்றவும் வலியுறுத்துவேன் என்றார்.