Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வேளாண் அலுவலக கட்டுமான பணிகள் துவக்கம்

வேளாண் அலுவலக கட்டுமான பணிகள் துவக்கம்

வேளாண் அலுவலக கட்டுமான பணிகள் துவக்கம்

வேளாண் அலுவலக கட்டுமான பணிகள் துவக்கம்

ADDED : செப் 01, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
கண்டமங்கலம்: கண்டமங்கலத்தில் ரூ. 3.55 கோடி செலவில் வேளாண் விரிவாக்க மைய அலுவலக கட்டுமான பணி துவங்கியது.

கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் வேளாண் விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டடம் பழுதடைந்து மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகி பயன்படுத்தாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த, 10 ஆண்டுகளாக பழைய பி.டி.ஓ., அலுவலகத்தில் வேளாண் விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் கண்டமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்திற்கு ரூ.3.55 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் வாசன் தலைமையேற்று, பணியை துவக்கி வைத்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி முருகன் முன்னிலை வைத்தார். மத்திய ஒன்றிய தி.மு.க., செயலாளர் சீனு செல்வரங்கம், ஒன்றிய கவுன்சிலர் கலைராஜன், ஊராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை சின்னத்தம்பி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அய்யனார், உதவி தோட்டக்கலை அலுவலர் கலைமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர்கள் புருஷோத்தமன், சண்முகம், மாவட்ட பிரிதிநிதி லட்சுமணன், வானூர் தொகுதி மருத்துவ அணி துணை அமைப்பாளர் செந்தில் உள்பட பள்ளர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us