/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் முன்னாள் மாணவர்கள் வழங்கல் அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் முன்னாள் மாணவர்கள் வழங்கல்
அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் முன்னாள் மாணவர்கள் வழங்கல்
அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் முன்னாள் மாணவர்கள் வழங்கல்
அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் முன்னாள் மாணவர்கள் வழங்கல்
ADDED : மே 28, 2025 07:18 AM

விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1995-97ம் ஆண்டு படித்த பிளஸ் 2 மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் ராமநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, கல்வி அலுவலர் மோகன், ஊராட்சி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் நளினி வரவேற்றார்.
பள்ளியின் முன்னாள், இன்னாள் ஆசிரியர்களுக்கு, குரு பூஜை செய்தனர். தொடர்ந்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
மேலும், பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பரிசும், பள்ளிக்கு கம்ப்யூட்டர்களையும் வழங்கினர்.
குடும்பத்துடன் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் அப்பாஸ்மந்திரி, கோபிநாத், ரமேஷ், குமார், உதுமான்அலி, கார்த்தி, பிரசாந்த், முனுஆதி உட்பட பலர் பங்கேற்றனர்.