/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி தாசில்தாருக்கு பணி நிறைவு பாராட்டு விழா செஞ்சி தாசில்தாருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
செஞ்சி தாசில்தாருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
செஞ்சி தாசில்தாருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
செஞ்சி தாசில்தாருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
ADDED : மே 31, 2025 11:58 PM

செஞ்சி: செஞ்சியில் பணி ஓய்வு பெறும் தாசில்தாருக்கு பாராட்டு விழா நடந்தது.
செஞ்சி தாசில்தாராக பணிபுரிந்து வந்த செல்வகுமார் நேற்று பணி ஓய்வு பெற்றார். இவருக்கான பணி நிறைவு பாராட்டு விழா தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.
சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் துரைச்செல்வன் தலைமை தாங்கி னார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் முருகன், செயற்குழு உறுப்பினர் வேங்கடபதி, தாசில்தார் கணேசன் முன்னிலை வகித்தனர்.
முதுநிலை வருவாய் ஆய்வாளர் கண்ணன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து சிறப்புரையாற்றினார். தலைமை இடத்து துணை தாசில்தார் மலர்விழி, வட்ட வழங்கல் அலுவலர் குமரன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, வருவாய் ஆய்வாளர்கள் பிரபு சங்கர், கீதா, சிவக்குமார், வருவாய் துறை ஊழியர்கள் கண்ணன், பழனி, பரமசிவம், ஊராட்சி தலைவர்கள் ரவி, செல்வி செல்வமணி, ராஜேந்திரன், காங்., நகர தலைவர் சூர்யமூர்த்தி, வி.ஏ.ஓ.,க்கள் முத்துக்குமார், ராஜேஷ், சிலம்பரசன், உதவியாளர் சங்கம் முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஒய்வு பெரும் தாசில்தார் செல்வகுமார் ஏற்புரை வழங்கினார். மண்டல துணை தாசில்தார் ராஜ்குமார் நன்றி கூறினார்.