ADDED : செப் 17, 2025 12:16 AM
விழுப்புரம்; கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அருகே சின்னக்குச்சிபாளையத்தை சேர்ந்த ராஜகோபால் மகள் ரோஷினி,19; இவர் விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
கடந்த 12ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகாரளித்தனர். இது குறித்து, வளவனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.