/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தினமலர் பணி மகத்தானது கலெக்டர் பாராட்டு தினமலர் பணி மகத்தானது கலெக்டர் பாராட்டு
தினமலர் பணி மகத்தானது கலெக்டர் பாராட்டு
தினமலர் பணி மகத்தானது கலெக்டர் பாராட்டு
தினமலர் பணி மகத்தானது கலெக்டர் பாராட்டு
ADDED : செப் 07, 2025 05:17 AM

விழுப்புரம்: தினமலர் நாளிதழ், 75 வது ஆண்டில் மக்கள் பணியில் ஈடுபடுவதை பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் முதன்மையான மற்றும் முன்னணி தமிழ் செய்தி நாளிதழ்களில் ஒன்றாக தினமலர் வளர்ந்துள்ளது.
அரசு நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக இருந்து சிறப்பாக செயல்பட்டு வரும் தினமலரின் பணி மகத்தானது.
மேலும் பொது பிரச்னைகள், சமூக பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு காண்பதற்கு உரிய வழிமுறைகளை செய்து வருகிறது.
இத்துடன் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி, மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாதிரித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தினமலர் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.