/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு பள்ளிகளில் கலெக்டர் 'திடீர்' ஆய்வு அரசு பள்ளிகளில் கலெக்டர் 'திடீர்' ஆய்வு
அரசு பள்ளிகளில் கலெக்டர் 'திடீர்' ஆய்வு
அரசு பள்ளிகளில் கலெக்டர் 'திடீர்' ஆய்வு
அரசு பள்ளிகளில் கலெக்டர் 'திடீர்' ஆய்வு
ADDED : ஜூலை 02, 2025 11:46 PM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு பள்ளிகளில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் அருகே ஆனாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மற்றும் அதன் அருகே இருந்த துவக்க பள்ளிக்கு சென்ற கலெக்டர், அங்கு ஆசிரியர்கள், மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். ஆசிரியர்கள், மாணவர் வருகை பதிவேடுகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகளை விசாரித்தார். மேலும் வகுப்பறையில் சிறிது நேரம் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்தார். அங்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கும் கற்பித்தல் திறன் குறித்தும், மாணவர்களின் கற்றல் நிலை மற்றும் வாசிப்புத்திறன் குறித்தும் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து பில்லுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு மேற்கொண்டு, கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறித்து கேட்டறிந்தார்.
அத்துடன், நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கற்பித்தல் மற்றும் வாராந்திர தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து கேட்டறிந்தார்.
பள்ளி இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் கல்வி பயில்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் பத்மஜா, பி.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், தேவதாஸ், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.