/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு., வாயிற்கூட்டம் மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு., வாயிற்கூட்டம்
மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு., வாயிற்கூட்டம்
மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு., வாயிற்கூட்டம்
மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு., வாயிற்கூட்டம்
ADDED : மார் 25, 2025 04:18 AM
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சி.ஐ.டி.யு., சார்பில் விழுப்புரத்தில் விளக்க வாயிற்கூட்டம் நடந்தது.
அரசு போக்குவரத்து கழகம் தலைமை பணிமனை முன் நடந்த கூட்டத்திற்கு, மண்டல தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் ஏழுமலை, துணைத் தலைவர்கள் தெய்வீகன், குணசேகரன், தங்கபாண்டியன், வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர்கள் காளிதாஸ், முருகன், துணை பொதுச் செயலாளர் மணி, பொதுச் செயலாளர் ரகோத்தமன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
கூட்டத்தில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு அமலாக்குவதை கண்டிப்பது. பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 15வது ஊதிய உயர்வை உடனே பேசி முடிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
பொருளாளர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.