/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மத்திய மாவட்ட தி.மு.க., செயலி பயிற்சி கூட்டம் மத்திய மாவட்ட தி.மு.க., செயலி பயிற்சி கூட்டம்
மத்திய மாவட்ட தி.மு.க., செயலி பயிற்சி கூட்டம்
மத்திய மாவட்ட தி.மு.க., செயலி பயிற்சி கூட்டம்
மத்திய மாவட்ட தி.மு.க., செயலி பயிற்சி கூட்டம்
ADDED : ஜூன் 29, 2025 12:21 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை செயலி மற்றும் சமூக ஊடகங்கள் கையாள்வதற்கான பயிற்சி கூட்டம் நடந்தது.
கலைஞர் அறிவாலயத்தில் நடந்த பயிற்சிக்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர் துரை சரவணன் முன்னிலை வகித்து, பூத் முகவர்கள், பூத் டிஜிட்டல் முகவர்களுக்கு பயிற்சி சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கினார்.
இதில், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், நகர பொறுப்பாளர்கள் சக்கரை, வெற்றிவேல், வளவனுார் பேரூராட்சி செயலாளர் ஜீவா, காணை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகர் உட்பட பூத் முகவர்கள், பூத் டிஜிட்டல் முகவர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.