/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ போதையில் தகராறு வாலிபர் மீது வழக்கு போதையில் தகராறு வாலிபர் மீது வழக்கு
போதையில் தகராறு வாலிபர் மீது வழக்கு
போதையில் தகராறு வாலிபர் மீது வழக்கு
போதையில் தகராறு வாலிபர் மீது வழக்கு
ADDED : மே 13, 2025 11:46 PM
வானுார் : மதுபோதையில் வீட்டின் ஜன்னலை உடைத்ததை தட்டிக்கேட்ட நபரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வானுார் அடுத்த நெமிலி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிரிநாத், 38; நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த அங்காளன் மகன் விஜய், கிரிநாத் வீட்டின் ஜன்னலை உடைத்தார். சத்தத்தை கேட்டு வெளியே வந்த கிரிநாத் விஜயை கண்டித்தார்.
ஆத்திரமடைந்த விஜய், கிரிநாத்தை கடுமையாக தாக்கினார். இதில் படுகாமடைந்த கிரிநாத் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வானுார் போலீசார், விஜய் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.