/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி மீது வழக்கு பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி மீது வழக்கு
பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி மீது வழக்கு
பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி மீது வழக்கு
பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி மீது வழக்கு
ADDED : ஜூன் 25, 2025 01:11 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பெண் சத்துணவு திட்ட சமையலரை மிரட்டியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த வடவாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மனைவி திலகவதி, 35; அரசு பள்ளியில் சத்துணவு திட்ட சமையலர்.
இவரது உறவினர் மணிகண்டனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி சிவா, 41; என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது மணிகண்டனுக்கு ஆதரவாக திலகவதி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவா, திலகவதியை திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
திலகவதி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் சிவா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.