/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சொத்து பிரச்னையில் தாயை மிரட்டிய மகன் மீது வழக்கு சொத்து பிரச்னையில் தாயை மிரட்டிய மகன் மீது வழக்கு
சொத்து பிரச்னையில் தாயை மிரட்டிய மகன் மீது வழக்கு
சொத்து பிரச்னையில் தாயை மிரட்டிய மகன் மீது வழக்கு
சொத்து பிரச்னையில் தாயை மிரட்டிய மகன் மீது வழக்கு
ADDED : செப் 14, 2025 11:16 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் சொத்து பிரச்னையில் தாயை மிரட்டிய மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம், சீத்தாராமன் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் மனைவி சரோஜா, 75; மகன் கார்த்திகேயன். இவர், சரோஜாவின் சகோதரி மல்லிகாவின், 77; வளர்ப்பு பிள்ளையாக வளர்த்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மல்லிகா இறந்தார். அவர் இறப்பதற்கு முன், அவரது 3 சென்ட் வீட்டினை கார்த்திகேயனுக்கு எழுதி வைத்துள்ளார்.
மல்லிகா எழுதி வைத்த சொத்தில் பங்கு வேண்டும் என சரோஜா கேட்டதால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், அவரை திட்டி, மிரட்டினார்.
சரோஜா கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.