/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தியேட்டர் ஊழியரை தாக்கிய பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு தியேட்டர் ஊழியரை தாக்கிய பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு
தியேட்டர் ஊழியரை தாக்கிய பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு
தியேட்டர் ஊழியரை தாக்கிய பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு
தியேட்டர் ஊழியரை தாக்கிய பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு
ADDED : செப் 21, 2025 04:57 AM
விழுப்புரம்:சினிமா தியேட்டர் ஊழியரை தாக்கிய பா.ம.க., பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
விழுப்புரத்தில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்றில், நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு 'படையாண்ட மாவீரா' படம் ஓடியது.
அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறால் படம் தடைபட்டது. உள்ளே சிலர் சத்தம் போட்டதால், அங்கு கேண்டீனில் இருந்த ஊழியர் நாகராஜன் சென்று பார்த்தார். அப்போது அவரை, கோலியனுாரை சேர்ந்த பா.ம.க., மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேல்,44; படத்தை ஏன் நிறுத்தினீர்கள் என கேட்டு திட்டி, தாக்கி மிரட்டல் விடுத்தார்.
திரையரங்க மேலாளர் அப்துல் ரகீம் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், ஞானவேல் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.