/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இரு தரப்பினர் மோதல் நான்கு பேர் மீது வழக்கு இரு தரப்பினர் மோதல் நான்கு பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் மோதல் நான்கு பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் மோதல் நான்கு பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் மோதல் நான்கு பேர் மீது வழக்கு
ADDED : மே 11, 2025 11:47 PM
விழுப்புரம்: தகராறில் தாக்கிக்கொண்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த சோழம்பூண்டியை சேர்ந்தவர் சபரிமுத்து, 38; இவரது மனைவி குறித்து, அதே பகுதியை சேர்ந்த தரணிதரன், 45; என்பவர் தவறாக பேசியுள்ளார். கடந்த 9ம் தேதி இதை தட்டிக்கேட்ட சபரிமுத்து மற்றும் அவரது மனைவி ஜெயந்தியை, தரணிதரன் மற்றும் அவரது மகன்கள் கார்த்தி, பாபு ஆகியோர் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, தரணிதரனை, சபரிமுத்து தாக்கினார்.
இருதரப்பு புகாரின்பேரில், தரணிதரன், சபரிமுத்து உள்ளிட்ட நான்குபேர் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.