/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ டாஸ்மாக்கில் போஸ்டர் ஒட்டிய பா.ஜ., நிர்வாகி 11 பேர் மீது வழக்கு டாஸ்மாக்கில் போஸ்டர் ஒட்டிய பா.ஜ., நிர்வாகி 11 பேர் மீது வழக்கு
டாஸ்மாக்கில் போஸ்டர் ஒட்டிய பா.ஜ., நிர்வாகி 11 பேர் மீது வழக்கு
டாஸ்மாக்கில் போஸ்டர் ஒட்டிய பா.ஜ., நிர்வாகி 11 பேர் மீது வழக்கு
டாஸ்மாக்கில் போஸ்டர் ஒட்டிய பா.ஜ., நிர்வாகி 11 பேர் மீது வழக்கு
ADDED : மார் 23, 2025 03:45 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போஸ்டர் ஒட்டிய பா.ஜ., நிர்வாகிகள் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
டாஸ்மாக் ஊழலை கண்டித்து டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் பா.ஜ., சார்பில் தமிழகம் முழுதும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள டாஸ்மாக் கடையை பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் வேலு தலைமையிலான நிர்வாகிகள் முற்றுகையிட்டு ஸ்டாலின் படத்தை ஒட்டி கடையின் முன் கோஷம் எழுப்பினர்.
முற்றுகையிட்டு போஸ்டர் ஒட்டிய வேலு மற்றும் நிர்வாகிகள் சிவபாலன், மாரி, முத்துக்குமார், தேன்மொழி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.