/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின் நிறுத்தத்தால் செயலிழக்கும் பி.எஸ்.என்.எல்., சேவை செஞ்சியில் வாடிக்கையாளர்கள் அவதி மின் நிறுத்தத்தால் செயலிழக்கும் பி.எஸ்.என்.எல்., சேவை செஞ்சியில் வாடிக்கையாளர்கள் அவதி
மின் நிறுத்தத்தால் செயலிழக்கும் பி.எஸ்.என்.எல்., சேவை செஞ்சியில் வாடிக்கையாளர்கள் அவதி
மின் நிறுத்தத்தால் செயலிழக்கும் பி.எஸ்.என்.எல்., சேவை செஞ்சியில் வாடிக்கையாளர்கள் அவதி
மின் நிறுத்தத்தால் செயலிழக்கும் பி.எஸ்.என்.எல்., சேவை செஞ்சியில் வாடிக்கையாளர்கள் அவதி
ADDED : செப் 01, 2025 12:17 AM
செஞ்சி : மின் நிறுத்தம் ஏற்படும் போது செஞ்சியில் பி.எஸ்.என்.எல்., சேவை துண்டிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர், பி.எஸ்.என்.எல்., மொபைல் மற்றும் 'லேன் லைன்' வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
மலையை ஒட்டி உள்ள கிராமங்களிலும் தடையற்ற சேவை கிடைப்பதால் மற்ற மொபைல் சேவைக்கு மாறாமல் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களாக தொடர்ந்து இருந்து வருகின்றனர்.
சமீப ஆண்டுகளாக செஞ்சியிலும் சுற்று வட்டாரத்திலும் மின்சாரம் தடைபட்டால் பி.எஸ்.என்.எல்., சேவையும் தடைபடும் நிலை உள்ளது.
நேற்று செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தினர் மின் நிறுத்தம் செய்திருந்தனர். மின் நிறுத்தம் துவங்கிய காலை 9:00 மணி முதல் மீண்டும் மின்சாரம் வழங்கிய மாலை 4:20 மணிவரை செஞ்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சேவை செயலிழந்தது.
செஞ்சியில் உள்ள வர்த்தகர்கள் பலரும் கணக்கு தாக்கல் செய்யவும், கணக்குகளை பதிவேற்றவும் பி.எஸ்.என்.எல்., பிராட் பேண்ட் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் வியாபாரிகள் அவதிப்பட்டனர்.
பி.எஸ்.என்.எல்., டவர்களில் பேட்டரிகள் செயலிழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இவற்றை மாற்றாமல் இருப்பதால் மின் தடை ஏற்பட்டவுடன் மொபைல் சேவை பாதிக்கப்படுகிறது. செஞ்சியில் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மின் தடையின் போதும் தடையின்றி மொபைல் சேவை தொடர்வதற்கு நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.