ADDED : மார் 18, 2025 04:45 AM
மயிலம்: மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.
முகாமிற்கு, கல்லுாரி முதல்வர் சுதா கிறிஸ்டிஜாய் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அரசு மருத்துவர் தேன்மொழி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் பாலகுமாரன் வரவேற்றார். திண்டிவனம் ரத்த வங்கி மருத்துவர் தனலட்சுமி, மாணவர்களிடையே ரத்தம் வழங்குவதன் அவசியம் குறித்து பேசினார். சுகாதார ஆய்வாளர் மோகன கிருஷ்ணன், செவிலியர்கள் உட்பட பல பங்கேற்றனர்.
பவ்டா கல்லுாரி துணை முதல்வர் சேகர் தேசிய மாணவர் படை அலுவலர் கார்த்திக் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.