/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பா.ஜ.,வினர் கருப்பு கொடி போராட்டம் பா.ஜ.,வினர் கருப்பு கொடி போராட்டம்
பா.ஜ.,வினர் கருப்பு கொடி போராட்டம்
பா.ஜ.,வினர் கருப்பு கொடி போராட்டம்
பா.ஜ.,வினர் கருப்பு கொடி போராட்டம்
ADDED : மார் 22, 2025 08:54 PM

திண்டிவனம், : திண்டிவனத்தில் பா.ஜ.,வினர் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடைபெறும் கூட்டத்திற்கு வருகை தரும் கேரளா, கர்நாடகா மாநில முதல்வர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பா.ஜ.,வினர் நேற்று மாநிலம் முழுதும் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்தினர்.
திண்டிவனத்தில் நகர தலைவர் வெங்கடேசபெருமாள் தலைமையில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து, தி.மு.க.,வை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட பொதுச் செயலாளர் எத்திராஜ், நிர்வாகிகள் சரவணன், ரகுநாத் பங்கேற்றனர்.
இதேபோல் இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்
விழுப்புரம் கே.கே., ரோட்டில் மாநில துணைத் தலைவர் சம்பத் தலைமையில் நகர தலைவர் வடிவேல்பழனி மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி பா.ஜ., நிர்வாகிகள், வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றினர்.
செஞ்சி
செஞ்சியில் தொழில் பிரிவு மாநில செயலாளர் கோபிநாத், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன், கிழக்கு ஒன்றிய தலைவர் தாராசிங், முன்னாள் ஒன்றிய தலைவர் தங்கராமு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் தங்களின் வீடுகளுக்கு முன் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர்.