/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குறிஞ்சிப்பை ஊராட்சியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை குறிஞ்சிப்பை ஊராட்சியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை
குறிஞ்சிப்பை ஊராட்சியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை
குறிஞ்சிப்பை ஊராட்சியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை
குறிஞ்சிப்பை ஊராட்சியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை
ADDED : ஜூன் 30, 2025 03:10 AM

செஞ்சி: குறிஞ்சிப்பை ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டும் பணியை மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
வல்லம் ஒன்றியம் குறிஞ்சிப்பை ஊராட்சியில், 33.44 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை மற்றும் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசி பாண்டியன் முன்னிலை வகித்தார்.
ஊராட்சித் தலைவர் சரஸ்வதி செல்வராஜ் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் அன்புச்செழியன், ஒன்றிய பொறியாளர் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதி கதிரவன், செஞ்சி தாலுகா வர்த்தகர் சங்க தலைவர் செல்வராஜ், ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் குறிஞ்சிவளவன், ஒன்றிய துணை செயலாளர் லட்சுமணன், ஊராட்சி துணை தலைவர் காசியம்மாள் காளிதாஸ், முன்னாள் கவுன்சிலர் தமிழ்மணி, முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.