/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை அரசு பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை
அரசு பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை
அரசு பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை
அரசு பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை
ADDED : செப் 22, 2025 11:32 PM

திண்டிவனம், : நொளம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
ஒலக்கூர் அடுத்த நொளம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 97.03 லட்சம் ரூபாய் செலவில், 3 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஒரு பெண்கள் கழிவறை கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை நடத்தி, கட்டட பணிகளை துவக்கி வைத்தார் .
நிகழ்ச்சியில் ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணை சேர்மன் ராஜாராம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கற்பகம், உதவி பொறியாளர் விமலா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஊரல் அண்ணாதுரை, ஜனார்த்தனன், தி.மு.க.,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முகுன், அயலக அணி முஸ்தபா, ஒன்றிய நிர்வாகிகள் சக்திவேல், சரவணன், பொன்னுரங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.