/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரத்தில் வரும் 15ம் தேதிக்கு பிறகு டிஜிட்டல் பேனர் வைக்க... தடை; அனைத்துக்கட்சி கூட்டத்தில் போலீஸ் அறிவுறுத்தல்விழுப்புரத்தில் வரும் 15ம் தேதிக்கு பிறகு டிஜிட்டல் பேனர் வைக்க... தடை; அனைத்துக்கட்சி கூட்டத்தில் போலீஸ் அறிவுறுத்தல்
விழுப்புரத்தில் வரும் 15ம் தேதிக்கு பிறகு டிஜிட்டல் பேனர் வைக்க... தடை; அனைத்துக்கட்சி கூட்டத்தில் போலீஸ் அறிவுறுத்தல்
விழுப்புரத்தில் வரும் 15ம் தேதிக்கு பிறகு டிஜிட்டல் பேனர் வைக்க... தடை; அனைத்துக்கட்சி கூட்டத்தில் போலீஸ் அறிவுறுத்தல்
விழுப்புரத்தில் வரும் 15ம் தேதிக்கு பிறகு டிஜிட்டல் பேனர் வைக்க... தடை; அனைத்துக்கட்சி கூட்டத்தில் போலீஸ் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 05, 2025 04:42 AM

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் முக்கிய இடங்களில் வரும் 15ம் தேதிக்கு பிறகு டிஜிட்டல் பேனர் வைக்க மாட்டோம் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சியினர் உறுதியளித்தனர்.
தமிழகத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் டிஜிட்டல் பேனர் வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்டத்தில் தனிநபர் முதல் அரசியல் கட்சிகள் வரை எவரும் பின்பற்றாததால், டிஜிட்டல் பேனர் கலாசாரம் தொடர்கதையாக உள்ளது.
அந்த வகையில், கலெக்டர் உள்ள விழுப்புரம் அலுவலகம் நகர பகுதியில் நான்குமுனை சிக்னலில் உள்ள இரண்டு பயணிகள் நிழற்குடை, புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடை, மாம்பழப்பட்டு ரோடு, கலெக்டர் அலுவலகம் எதிரில், ரயில் நிலையம் நுழைவு வாயில் உள்ள பகுதியில் அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர் வைக்கின்றனர். நிழற்குடைகளில் பேனர்களை ஒட்டுவதால் அடிக்கடி அரசியல் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டு வருகின்றது.
இதையடுத்து, நகரில் டிஜிட்டல் பேனர் வைப்பதில் தகராறு ஏற்படுவது தொடர்பாக காவல் துறை சார்பில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் காவலர் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமை தாங்கினார். ஏ.எஸ்.பி., ரவிந்திரகுமார் குப்தா, நகராட்சி கமிஷனர் வசந்தி முன்னிலை வகித்தனர்.
இதில், ரயில் நிலையம் நுழைவு வாயில், நான்குமுனை சிக்னல் நிழற்குடைகள், சிக்னல் வளைவு பகுதி, கலெக்டர் அலுவலகம் எதிரில், புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள நிழற்குடை ஆகியவற்றில் டிஜிட்டல் பேனர் வைக்கக்கூடாது என காவல் துறை சார்பில் அறிவுறுத்தினர்.
அதற்கு, அ.தி.மு.க.,வினர் பேசும்போது, மற்ற கட்சிகள் பேனர் வைத்தபோது தடைவிதிக்காமல், தங்கள் கட்சி பொதுச்செயலாளர் வரும்போது தடைவிதிப்பதாக கேள்வி எழுப்பினர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி வரை பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என்றனர். அதற்கு, மற்ற அரசியல் கட்சியினர் வரும் 15ம் தேதி வரை பேனர் வைக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதன் பின் பேனர் வைக்க மாட்டோம் என அரசியல் கட்சியினர் கூறினர். அதற்கு, 15ம் தேதி வரை பேனர் வைக்க போலீசார் அனுமதி வழங்கினர்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க., நகர செயலாளர் பசுபதி, ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, தி.மு.க., நகர செயலாளர் வெற்றிவேல், தே.மு.தி.க., நகர செயலாளர் மணிகண்டன், பா.ஜ., சுகுமார், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு ஏட்டுகள் சிவக்குமார், ராமசாமி, ராம்குமார் உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.