திண்டிவனம், : கோனேரிக்குப்பம் சரஸ்வதி சட்டக்கல்லுாரியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு, சட்டக்கல்லுாரி முதல்வர் அசோக்குமார் தலைமை தாங்கினார். டாக்டர் ரம்யாஸ்ரீ உடல் உறுப்பு தானம் குறித்து சிறப்புரையாற்றினார்.
அம்பேத்கர் சட்ட பல்லைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., அலுவலர் ஹாருண்யா தொகுத்து வழங்கினார். கல்லுாரி பேராசிரியர் ஜானகிராமன் நன்றி கூறினார்.