ADDED : செப் 12, 2025 04:03 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் லுாசி நிர்மல் மடோனா தலைமை தாங்கினார்.
மேலும் தற்கொலை விழிப்புணர்வு தடுப்பு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, பேரணியை துவக்கி வைத்தார்.
இதில், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், துணை முதல்வர் தாரணி, மருத்துவ கண்காணிப்பாளர் பார்த்த சாரதி, உளவியல் துறை தலைவர் பேராசியர் புகழேந்தி, ஏ.ஆர்.எம்.ஓ., வெங்கடேசன் , மருத்துவ கல்லுாரி, செவிலியர் கல்லுாரி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.