ADDED : ஜன 28, 2024 07:24 AM
வானூர், : வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் செயல்பட்டு வரும், அரசு கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்ட பங்களிப்புடன் குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில், மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வில்லியம் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அருளமுதம் வரவேற்றார்.
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி பெண் குழந்தைகள் முக்கியத்துவம், பாலின பாகுபாடு, ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து பேசினார்.