/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வன பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வன பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வன பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வன பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வன பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மே 23, 2025 12:24 AM

விழுப்புரம் : சர்வதேச உயிரி பல்வகைமை தினத்தையொட்டி, விழுப்புரம் வனக்கோட்ட அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
'இயற்கை மற்றும் நிலையான வளர்ச்சியுடன் இணக்கம்' தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி தலைமை தாங்கினார். உதவி வன பாதுகாவலர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.
வனச்சரக அலுவலர்கள் அஸ்வினி, தினேஷ்குமார் ஆகியோர் இயற்கை மற்றும் மக்களோடு இணைந்து காடுகளில் உள்ள மரங்களை பாதுகாப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், வன பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.