ADDED : ஜன 19, 2024 07:34 AM

வானுார் : திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், இரவு நேர ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், 35வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 3ம் நாள் நிகழ்ச்சியாக புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், மொரட்டாண்டி டோல்கேட் சந்திப்பில், இரவு நேர ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் மோட்டார் வாகன அலுவலர் முக்கண்ணன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுந்தர்ராஜன், முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெகு துாரத்தில் இருந்து வந்த கனரக வாகன ஓட்டுநர்களுக்கு, டீ, பிஸ்கெட் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


